/* */

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
X

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி துறைமுக சாலையில், மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் (என்டிபிஎல்) அனல்மின் நிலையத்தில் உள்ள தலா 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் தினமும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணிபுரியம் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த பொறியாளர் சுதாகர் கடந்த 21 ஆம் தேதி இரவு அனல் மின் நிலையத்தில் பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அனல் மின் நிலையத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆபத்து காலங்களில் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லாத நிலை உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஒப்பந்த ஊழியரான பொறியாளர் சுதாகர் உயிரிழந்துள்ளார் என்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த நிலையில், பொறியாளர் சுதாகர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று அவரது குடும்பத்துக்கு என்டிபிஎல் நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் உயர்தர மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் என்டிபிஎல் அனல்மின் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 23 March 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!