/* */

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் லக்கமாதேவி புரத்தை சேர்ந்த நபர், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
X

தீக்குளிக்க முயன்ற வடிவேலு. 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி புங்கவர்னந்தம் பஞ்சாயத்து லக்கம்மாள் தேவி கிராமத்தை சார்ந்த 40க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து, அவ்வூரை சார்ந்தவர்கள் கூறுகையில், தங்கள் ஊரில் ஒரு சமூகத்தைச் சார்ந்த இரு தரப்பினருக்கு இடையே சந்தனமாரியம்மன் - மாடசாமி கோவில் கொடை நடத்துவது தொடர்பாக எட்டையாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி தலைமையில் பீஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றதாக கூறினர்.

இதில், சுமூகத்தீர்வு ஏற்படாததைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஊரைச் சார்ந்த பஞ்சாயத்து இரண்டாவது வார்டு உறுப்பினர் வடிவேல் என்பவர், ணெண்ணெய்யை தலையில் ஊற்றி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், வடிவேலுவிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்துச் சென்றனர். ரூரல் டிஎஸ்பி பொறுப்பு சம்பத், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்ததை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் ஓரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 26 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு