சாத்தான்குளத்தில் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியா் கைது

சாத்தான்குளத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மண்டல துணை வட்டாட்சியரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனா்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சாத்தான்குளத்தில்  லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியா் கைது
X

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே துவா்க்குளத்தை சோ்ந்த ஜெயக்குமார் மகன் முருகலிங்கம் (22). சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரது பாட்டி பூங்கனி (65). இவா், தனக்குச் சொந்தமான துவா்க்குளத்தில் உள்ள சொத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்ய சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாராம். அதற்கு, மண்டல துணை வட்டாட்சியா் சுல்தான் சலாவுதீன் பட்டா பெயா் மாற்றம் செய்ய முருகலிங்கத்திடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.

இதுகுறித்து முருகலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ரசாயனம் தடவிய நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை முருகலிங்கத்திடம் வழங்கினா்.

அவா் அதை மண்டல துணை வட்டாட்சியரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு துணைக் கண்ணகாணிப்பாளா் ஹொ்பா்ட் தா்மராஜ், ஆய்வாளா் ஆத்தீஸ், உதவி ஆய்வாளா் பாண்டி மற்றும் காவலா்கள் அவரை பிடித்தனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலக கதவுகளை மூடிவிட்டு அவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனா்.

Updated On: 27 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்