காவல்துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார் அளிக்க முடிவு

காவல் துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார் அளிப்போம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காவல்துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார் அளிக்க முடிவு
X

தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கன்னியாகுமரி மண்டல கூட்டம், தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜா தலைமை வகித்தார். தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, திருநெல்வேலி மண்டலத் தலைவர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் காமராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் அல் அமீன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு மே மாதம் 5 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கின்றது. இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமைகள் குறித்து மத்திய, மாநில அரசுக்கு வலியுறுத்த உள்ளோம். இந்த மாநாட்டில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். வாகன சோதனை என்ற பெயரில் இ-இன்வாய்சில் சிறுசிறு குறைகள் இருப்பினும் அதனை பெரிதாக்கி அபராதம் விதிக்கும் முறை உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டம் மூலம் வணிகர்கள், இளைஞர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அதனை மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தடை செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்ககூடிய நடிகர்கள் சம்பளம் வாங்கி கொண்டு நடிக்கின்றார்கள். அது அவர்கள் தொழில். ஆனால் ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தினை மத்திய அரசு முடிவு செய்து ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொறுத்தவரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிலைபாடு என்பது தனிநபருக்கு துணைபோவது இல்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அதன் தீர்பு வந்த பிறகு எங்கள் முடிவை சொல்கின்றோம். வணிகர் சங்கங்களின் பேரமைப்பை பொறுத்தவரையில் தமிழகத்தில் எந்த ஒரு நிறுவனமும் மூடப்படக் கூடாது. திறக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் மூடிகிடக்கும் ஸ்பின்னிங் மில்லினை திறக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். இரவு நேர கடைகளை பொறுத்தவரையில் காவல்துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார் அளித்த்து நடவடிக்கைகள் எடுக்க தயங்கமாட்டோம் என விக்ரமராஜா தெரிவித்தார்.

Updated On: 18 March 2023 4:37 PM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்