/* */

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

HIGHLIGHTS

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
X

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் மின் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு புதன்கிழமை ஆறுதல் தெரிவித்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது

இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. தமிழக முதல்வர் காலை 5 மணிக்கெல்லாம் எங்களையும், அதிகாரிகளையும் அனுப்பி சம்பவ இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரது அணுகுமுறை எந்த அளவுக்குச் சிறப்பான முறையில் இருக்கிறது என்பதை பார்க்கலாம். அதிகாலை 3 மணிக்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாக பொறுப்பு அமைச்சரையும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் தமிழக முதல்வர் மனது தாங்காமல் எங்களை முன்னே செல்லுமாறு கூறிவிட்டு அவரும் வந்து கொண்டிருக்கிறார். நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்து விட்டது. எங்களால் என்ன செய்ய முடியுமோ தமிழக முதல்வர் செய்வார்.

அதிமுகவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் குற்றச்சாட்டுகளாகப் பார்க்கவில்லை. இறந்திருக்கிற சின்ன உயிராக இருந்தாலும், பெரிய உயிராக இருந்தாலும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறோம். இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கருதுகிறோம். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார் அமைச்சர். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை, டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 27 April 2022 8:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...