/* */

அரிய வகை ஓலைச்சுவடி விற்க முயற்சி : சரஸ்வதி நூலக ஊழியர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு

தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தில் இருக்கும் அரிய வகை ஓலைச்சுவடிகளை விற்க முயற்சி செய்ததாக சரஸ்வதி நூலக ஊழியர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

அரிய வகை ஓலைச்சுவடி விற்க முயற்சி    : சரஸ்வதி நூலக ஊழியர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
X

தஞ்சாவூர் பழமைமிகு சரஸ்வதி நூலகம்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வகை ஓலைச்சுவடியை, சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் விற்க முயற்சி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நூலகம் ஆகும். இங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரியவகை ஓலைச்சுவடிகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வந்து ஆய்வு மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு உள்ள ஓலைச் சுவடிகள் குறித்து பல்வேறு அரிய தகவல்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் மேற்கொண்டு வரும் பாவனா பிரபாகரன் என்பவர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சரஸ்வதி மகால் நூலகத்கதிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தனது ஆய்விற்காக தாளதீபிகா நாட்டிய சுவடிகளின் தகவல் வேண்டும் எனவும், அதில் உள்ள 256 இலைசுருள்களை மின்னுருவாக்கம் செய்து தனக்கு வழங்க வேண்டும் என்று அதற்கான கட்டண தொகையாக 2000 ரூபாய் செலுத்துவதாக கூறி காசோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, அதற்கான பணியை இரண்டாம் நிலை நூலகர் சுதர்சனம்,சரஸ்வதி நூலகத்தின் இயக்குனரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடமும் கையெழுத்து பெற்று அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இதனையறிந்த தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சரஸ்வதி நூலக நிர்வாக அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓலைச்சுவடியின் தொன்மை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஓலைச்சுவடி அனுப்பும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து ராமதாஸ் கூறுகையில், விஜயநகரப் பேரரசர் இரண்டாம் ஹரிஹரனின் நெருங்கிய உறவினரும், மிகச்சிறந்த நாட்டியக்கலை வல்லுநருமான சாளுவ திப்பதேவ மகாராயர் எழுதிய தாளதீபிகா ஓலைச்சுவடி சுமார் 600 ஆண்டுகள் பழமையானது.

இந்த ஓலைச் சுவடியில் பரதநாட்டியத்தின் அரிய தகவல்கள், பாவனைகள் ஆகியவை குறித்து உள்ளது. இன்னும் இந்த ஓலைச் சுவடி நூலாக்கம் பெறாத போது, எப்படி வெளி நபருக்கு ஆய்வுக்காக கொடுக்க முயன்றார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் கூறியபோது உடனடியாக இந்த பணியை நிறுத்தினார். இது போன்று எத்தனையோ ஓலைச்சுவடிகளையும், அரியவகை புத்தகங்களையும், இங்கு பணிபுரியும் நூலகர் சுதர்சனம், சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் சேர்ந்து வெளி நபர்களுக்கு கொடுத்து உள்ளனர்.

ஆனால், இதுவரை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடிகள் மின் உருவாக்கம் செய்யப்பட்டு வரும் பணியில் எந்த பாதுகாப்பும் இல்லை. அதை யார் வேண்டுமானாலும் காப்பி செய்து வெளியாட்களிடம் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள அரிய வகை புத்தகங்கள் தனியார் இணையதளங்களில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றார்.

குறிப்பாக கோவிலூர் மடத்திற்கு சொந்தமான இணைய தளத்தில் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட நூலகங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த மடத்தின் ஆலோசகராக சுதர்சனம் செயல்படுகிறார். அரிய ஓலைச்சுவடிகள் எவ்வாறு தனியார் வசம் சென்றது என அவர் கேள்வி எழுப்புகிறார். எனவே, ஒரு வல்லுனர் குழுவை அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் சுதர்சனம், வீரராகவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

நூலகர் சுதர்சனம் மற்றும் சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. குறிப்பாக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து உலகில் முதல் பைபிள் புத்தகம் காணாமல் போன வழக்கில் இவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நூலகர் சுதர்சனத்திடம் விளக்கம் கேட்டபோது, இன்று நான் விடுமுறையில் இருக்கிறேன். நாளை அலுவலகத்தில் இருக்கும்போது தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.

Updated On: 21 Jun 2021 1:06 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...