/* */

30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு

மதுக்கூர் வட்டாரத்தில் 30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு
X

நெம்மேலி கிராமத்தில் ஒரே நாளில் 30 விவசாயிகளின் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் மதுக்கூர் வட்டாரம், நெம்மேலி கிராமத்தில் ஒரே நாளில் 30 ஏக்கர் 30 விவசாயிகளின் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அவர்களின் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசன் அவர்களின் வழிகாட்டுதல்படி நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்க நெம்மேலி கிராமத்தை சேர்ந்த 30 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் தெளிக்கப்பட்டது.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் யூரியா மேலுரம் இடுவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையிலும் 46 சதவீத யூரியா திட உரத்தினை பயன்படுத்தும் போது அரசுக்கு ஏற்படும் மானிய இழப்பை தவிர்க்கும் வகையிலும் உற்பத்திச் செலவை குறைத்து உழவர்களின் லாப சதவீதம் உயரும் வகையிலும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 46 சத தழைச்சத்து கொண்ட யூரியா செய்யும் பணியை 4, சத தழைசத்துக் கொண்ட நானோயூரியா செய்கிறது.

விவசாயிகள் பொதுவாக பரிந்துரைப்படி ஏக்கருக்கு இட வேண்டியது 22 கிலோ என்ற போதிலும் நிலவும் பருவ சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா வரை செலவு செய்கின்றனர். தெளிப்பதற்கான செலவினம் தனியாக ரூபாய் 300 ஆகிறது ஆனால் நானோ யூரியா பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் நானோ யூரியா போதுமானது. இதன் விலை ரூபாய் 230 இதனை 20 லிட்டர் நீரில் கலந்து மாவுக்கு ஏழு டேங்க் ஏக்கருக்கு 21 டேங்க் வரை தெளிக்கலாம் .

நானோ யூரியா யூரியா போல வீணாக கரைவதும் இல்லை ஆவி ஆவதும் இல்லை நிலத்தடி நீருடன் கலந்து வீணாவதுமில்லை நானோ யூரியா நேரடியாக பயிரினால் எவ்வித சேதம் இன்றி இலைவழி உரமாக நேரடியாக பயிரினாலா எடுத்துக் கொள்ளப்படுகிறது. கைத்தெளிப்பான் மற்றும் பவர் தெளிப்பான்கள் மூலம் தெளிப்பதை விட ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் சாகுபடி மேற்கொண்டு ஒரே நேரத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பதால் நீரின் தேவையும் குறைகிறது தெளிப்பு செலவினமும் குறைகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய தினம் விவசாயிகள் நெம்மேலி கிராமத்தில் ஒருங்கிணைந்து இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி மேற்கொண்டனர். ஒரு ஏக்கருக்கு பத்து நிமிடத்தில் தெளித்து முடித்து விடுகிறது. ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரியின் ஒத்துழைப்புடன் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் உதவியுடனும் இன்றைய பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து நானோ யூரியா தெளித்தல் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

நெம்மேலி கிராம முன்னோடி விவசாயிகள் பெரமையன் சேதுராமன் இருளப்பன் மற்றும் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு இது போன்ற திட்டங்கள் தங்களுக்கு மிக உதவியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு தெளிப்பு செலவினம் குறைவதோடு உற்பத்தி செலவு குறைவதால் சிறப்பான திட்டம் என தெரிவித்தனர்.

மேலும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதற்கும் இத்தகு உதவிகள் கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என கூறினார். ட்ரோன் மூலம் தெளிப்பதால் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் நீர் போதுமானது. அரசு நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி திட்டத்தில் இலைவழி உரம் தெளிப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகள் செய்தால் கூடுதல் பலன் அளிக்கும் என தெரிவித்தனர். கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி தொழில்நுட்ப உதவியாளர் அருள் தாஸ் நன்றி கூறினார்

Updated On: 8 Dec 2022 2:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது