/* */

வேட்பாளர்களுடன் தென்காசி கலெக்டர் ஆலோசனை

வேட்பாளர்களுடன் தென்காசி கலெக்டர் ஆலோசனை
X

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடு மற்றும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் மே-2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் பத்திரப்படுத்தபட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On: 23 April 2021 6:20 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்