பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருட்டு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருட்டு
X

திருவேங்கடம் அருகே பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(40), இவரது உறவினர் ராமலட்சுமி(35). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அரசு பஸ்சில் சென்றனர். அப்போது பஸ், கலிங்கப்பட்டி அருகே சென்ற போது மகேஸ்வரி தான் வைத்திருந்த பேக்கை பார்த்த போது யாரோ மர்ம நபர் பேக்கை, பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.3700ஐ திருடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர் ராமலட்சுமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய பேக்கை திறந்து பார்த்ததில், பேக்கில் வைத்திருந்த ரூ.2500 பணமும் பிளேடால் கிழித்து திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர்கள் பஸ் கண்டக்டரிடம் கூறியுள்ளனர். உடனே பஸ் பயணிகளுடன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகேஸ்வரி, ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் பெண்கள் பேக்கில் ரூ.6,200 திருடப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 2021-03-04T15:30:30+05:30

Related News

Latest News

 1. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 2. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 3. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 4. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 5. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
 7. வந்தவாசி
  வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர்...
 8. உலகம்
  அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
 9. வந்தவாசி
  வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்