/* */

காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு: பாஜகவினர் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மஹாலில் தங்க வைத்தனர்

HIGHLIGHTS

காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோயில் இடிப்பு: பாஜகவினர் சாலை மறியல்
X

ஆஞ்சநேயர்கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து காளையார்கோயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோவில் இடித்ததை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் தாலுகா, ஸ்வர்ண காளீஸ்வரர் ஆலய தெப்பக்குள மேகரையில் புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோயில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் இருப்பதாக கூறி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அக்பர் அலி,கோட்ட பொறியாளர் சையது இப்ரஹிம், சாலை ஆய்வாளர் செல்வி மற்றும் மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஆஞ்சநேயர் கோவிலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தள்ளி தரைமட்டமாக்கினர்.

கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை கண்டித்தும் பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மஹாலில் தங்க வைத்தனர்.

Updated On: 11 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை