/* */

திருமயம் அருகே தைப்பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்

சிவகங்கை, மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 81 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

HIGHLIGHTS

திருமயம் அருகே தைப்பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்
X

திருமயம் அருகே தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

திருமயம் அருகே தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 19ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று காலை நடைபெற்றது.

போட்டியில், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 81 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

பெரியமாடு போய்வர 8 மைல் தூரமும், சிறிய மாடு போய்வர 6 மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக தொடங்கிய பெரியமாடு பிரிவு போட்டியை, முன்னாள் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ராம. சுப்புராம் தொடங்கி வைத்தார்.

இதில் 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில், முதல் பரிசு சிவகங்கை மாவட்டம் வெற்றியூர் சிங்கதுரை, 2ம் பரிசு திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கருப்பம்மாள், 3ம் பரிசு திருச்சி கிளியூர் அசோக், 4ம் பரிசு மதுரை மாவட்டம், ஆட்டுகுளம் கோமளம் அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் போட்டி நடத்தும் கமிட்டியாளர்கள் எதிர்பார்க்காத வகையில் 60 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி மூன்றாக பிரித்து நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

போட்டியானது திருமயம்- ராயவரம் சாலையில் நடைபெற்றது. போட்டி நடைபெற்ற சாலையின் இருபுறமும் மக்கள் நின்று போட்டியை கண்டு ரசித்தனர். திருமயம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கடியாபட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Updated On: 22 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை