/* */

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுதந்திர தின அமுது பெருவிழா: ஆட்சியர் தொடக்கம்

சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில் 15.09.2021 முதல் 02.10.2021 வரை கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம்

HIGHLIGHTS

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுதந்திர தின அமுது பெருவிழா: ஆட்சியர் தொடக்கம்
X

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தினஅமுது பெருவிழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தின அமுது பெருவிழா கொண்டாடும் வகையில், பொதுமக்களிடையே எல்இடி வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது: தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில், 15.09.2021 முதல் 02.10.2021 வரை கிராமப்புறங்களில் தூய்மை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, மலக்கசிடு மேலாண்மை, நெகிழிக் கழிவு மேலாண்மை தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன்ஒருபகுதியாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டு, 02.10.2021 வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும்17.09.2021 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நெகிழிக் கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்,மாணவர்களுக்கு திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்து கவிதை மற்றும் ஓவியப்போட்டி நடத்துதல், கிராம ஊராட்சிகளின் முக்கியமான பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் சுகாதாரம் குறித்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்துதல், தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுவர்களில் 'தூய்மை பாரதம்" தொடர்பான சுவர் ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Updated On: 15 Sep 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?