/* */

பிளஸ்2 பொதுத்தேர்வு : புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் தேர்வு எழுதுகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

பிளஸ்2 பொதுத்தேர்வு : புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் தேர்வு எழுதுகின்றனர்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 05.05.2022 அன்று தொடங்கி 28.05.2022 வரை நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களும் தனித் தேர்வர்களுக்கு 02 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 160 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 11- வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.05.2022 அன்று தொடங்கி 30.05.2022 வரை நடைபெறவுள்ளது. இதில் 23,298 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 02-தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 190 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு: மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 10.05.2022 அன்று தொடங்கி 31.05.2022 வரை நடைபெறவுள்ளது. இதில், மாணவ, மாணவிகள் 21,017 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 91 தேர்வு மையங்களும் 02 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுள்ளன. 160 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை சுமுகமான முறையில் நடத்திட தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, கழிவறை வசதி, மின்வசதி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக தேர்வுகளை நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழுகவனம் செலுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.




Updated On: 4 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  6. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  8. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  9. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்