/* */

புதுக்கோட்டையில் கலை சங்கமம் விழா: கலைஞர்களுக்கு பரிசளிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1973 ஆம் ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தொடங்கப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் கலை சங்கமம் விழா: கலைஞர்களுக்கு பரிசளிப்பு
X

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய  தலைவர் வாகை சந்திரசேகர்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சியினை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் , மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு ஆகியோர் இன்று (24.02.2023) பார்வையிட்டு, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

பின்னர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், ஒன்றிய அரசின் சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்திட, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பினை தமிழ்நாடு மாநில அரசால் தோற்றுவிக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் 1973 ஆம் ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் சூட்டப்பட்டு மாநில அளவில் இயல், இசை, நாடகம், நாட்டியம், கிராமிய கலைகள், திரைப்படம், சின்னத்திரை மற்றும் ஓவியம் போன்ற கலைகளை போற்றி பாதுகாக்கவும், துறை சார்ந்த கலைஞர் பெருமக்களுக்குத் தேவையான உதவிகளையும், கலை வளர்ச்சி பணிகளையும் செயல்படுத்துவதே தனது உயரிய நோக்கமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை மன்றம் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக நலிவுற்ற கலைஞர்களுக்கான மாதாந்திர நிதி உதவி, புதிய நாட்டிய நாடகங்கள், நாடகங்கள் தயாரிப்பதற்கான நிதி உதவி, புதிய கலை இலக்கிய நூல்களை பதிப்பிப்பதற்கான நிதி உதவி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கலை விழாக்களை நடத்துதல், தமிழின் சிறப்புகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக முத்தமிழ் முகாம் சிறப்பு திட்டம், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள் வாங்கிட ஆண்டுதோறும் நிதி உதவி வழங்குதல், தலைசிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விதமாக தலைமாமணி விருது வழங்கி சிறப்பிக்கும் தலையாயப் பணி என பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

தமிழ் புத்தாண்டம் தைத்திருநாளான பொங்கல் விழாவினை சிறப்புடன் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், நிறைவாக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ‘கலை சங்கமம்" கலை விழாவினை நடத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க திருச்சி, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ‘கலை சங்கமம்" கலை விழா நடைபெற்றது.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கலைகளிலும் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம்/ விழா ஒருங்கிணைப்பாளர் தி.சோமசுந்தரம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாட்சா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 24 Feb 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு