/* */

ரயில்வே மேம்பால பணிக்கு 'சிக்னல்' கிடைக்குமா? தொடரும் வாகன ஓட்டிகளின் அவதி!

புதுக்கோட்டை களமாவூர் ரயில்வே மேம்பாலம் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள களமாவூரில், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரைத் திட்ட அலுவலர் மேற்பார்வையில், 2006ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.

இதில், திருச்சி புதுக்கோட்டை இடையேயான 50 கிலோமீட்டர் தொலைவிற்கு, கீரனூர் - களமாவூர் பகுதியில் ரயில்வே பாதை குறுக்கிடுகிறது. இதற்கான உயர்மட்ட பாலம் முடிந்த நிலையில், இணைப்பு சாலை பணி மட்டும் நிறைவடையவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.

இதனால், பணியை மீண்டும் தொடராமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். மற்றொரு ஒப்பந்ததாரர் மூலம் பணி தொடங்க உத்தரவிடப்பட்டது. கீரனூர் - களமாவூர் சாலை, 1/2 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இம்மேம்பால சாலை பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மாற்றுச்சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. சாலை பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த பணி நிறைவடையாததால், வாகன ஓட்டிகள் ஒற்றையடிப் பாதையில் செல்வது போல், வாகனத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இதனால், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், மது பிரியர்களின் இரவுநேர மதுபான கூடமாகவும் காட்சியளிக்கின்றது.

Updated On: 29 April 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...