/* */

நீலகிரி மாவட்டத்தில் 100- ஐ தொட்டது டீசல் விலை

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை 100- ஐ தொட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் 100- ஐ தொட்டது டீசல் விலை
X

மலை மாவட்டமான நீலகிரியில், கடந்த ஜூன் 18-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.105-ஐ நெருங்கியது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ஏறுமுகமாக உள்ளது. ஊட்டியில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 பைசா உயர்ந்து ரூ.104.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.104.73 க்கு விற்பனையானது.

அதேபோல், சமீப நாட்களாக டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கி வந்தது. ஊட்டியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.34-க்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.99.95-க்கு விற்பனையானது. நேற்று 39 பைசா அதிகரித்து பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100-ஐ கடந்து உள்ளது.

சமவெளிப் பகுதிகளில் இருந்து, நீலகிரிக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சரக்கு வாகனங்கள், லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு முக்கிய எரிபொருளாக டீசல் உள்ளது. டீசல் விலை உயர்ந்து உள்ளதால், வாடகை கட்டணம் அதிகரித்து இருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

Updated On: 17 Oct 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...