/* */

நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ரத்ததான முகாம்

நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கு காலத்தில், நீலகிரி சேவா கேந்திரத்தினர் பொது மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோத்தகிரியில் சேவா கேந்திரம் மூலம் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து ரத்ததானம் செய்தனர் .

இத் குறித்து, நீலகிரி மாவட்ட சேவா கேந்திரம் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், ஊரடங்கு காலத்தில், பொது மக்களுக்கான உணவு, காய்கறி மளிகை தொகுப்புகள், கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட சமூகப்பணிகளை செய்து வருகிறோம். ஊரடங்கு முடியும்வரை மக்களுக்கான இத்தகைய பணிகள் தொடரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், கோத்தகிரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஹரி சுதன், நீலகிரி சேவா கேந்திர பொறுப்பாளர்கள் கணேஷ் வைபவ், பூவராஜன், குமார்,மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jun 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?