/* */

கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்போராட்டம்

கூடலூர் பகுதியில் தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்போராட்டம்
X

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன்  தலைமையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் மற்றும் வியாபாரி சங்கம் சார்பாக நடைபெற்றா உண்ணாவிரத போராட்டம்.

நீலகிரி மாவட்டம் உதகையில், அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனையை, கூடலூர் பகுதியில் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சுமார் மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் அவசர மருத்துவ தேவைக்காக கோவை அல்லது கேரளா மாநிலத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட தலைமை மருத்துவமனையை கூடலூரில் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, மாவட்ட தலைமை மருத்துவமனை குன்னூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இது கூடலூர் பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் தலைமையில், அரசியல் கட்சியினர்,பொதுநல அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் முடிவில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை கூடலூர் பகுதியில் அமைத்திட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை முதல், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் தலைமையில் பொதுநல அமைப்புகள் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள், பாரதிய ஜனதா, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி இணைந்து கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில், காந்தி திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக தலைமை மருத்துவமனையை கூடலூர் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Oct 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?