/* */

நாமக்கல்லில் நாளைமுதல் வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி மார்க்கெட்

நாமக்கல் நகராட்சியில், காய்கறி மொத்த மார்க்கெட் இடத்தை கலெக்டர், எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளைமுதல் வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி மார்க்கெட்
X

நாமக்கல் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் செயல்பட உள்ள வாரச்சந்தை வளாகத்தை,  கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்  ஆய்வு செய்தனர்.

நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு ரோட்டில், வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட், கொரோனா ஊரடங்கால் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் மொத்த விற்பனை மார்க்கெட், 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட உள்ளது.

இதையொட்டி மார்க்கெட் அமைய உள்ள இடத்தை நகராட்சிப்பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து வைத்துள்ளனர். அந்த இடத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காய்கறி மார்க்கெட்டிற்கு வருகை தரும் வியாபரிகள், கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து, சமூக இடைவெளியில் நடந்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும், 6.5கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள நவீன தினசரி காய்கறி மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், சுகாதார அலுவலகம் சுகவனம், இன்ஜினியர் ராஜேந்திரன், தாசில்தார் தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 10 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  6. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  7. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  8. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  9. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து