/* */

நாமக்கல்: வருமுன் காப்போம் திட்டத்தில் 2.40 லட்சம் பேருக்கு சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில், வருமுன் காப்போம் திடத்தில் 2.40 லட்சம் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல்: வருமுன் காப்போம் திட்டத்தில் 2.40 லட்சம் பேருக்கு சிகிச்சை
X

ராஜாகவுண்டம்புதூர் கிராமத்தில், வருமுன் காப்போம் திட்டத்தில், முதியவர் ஒருவருக்கு, அரசு டாக்டர் மூலம் வீட்டிலேயே பிசியோ தெராபி சிகிச்சை அளிக்கப்படுவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையொட்டி, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ராஜாகவுண்டம்புதூர் கிராமத்தில் 65 வயதான முதியவர் சாமி என்பவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை மற்றும் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை அளிக்கப்பட்டு, படுத்தப்படுக்கையாக இருந்த அவர் தற்போது கயிற்றை பிடித்து எழுந்து நடப்பதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த 68 வயதான ராஜம்மாள் என்ற மூதாட்டிக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளான 99,706 நோயாளிகள், 53,473 சர்க்கரை நோயாளிகள் உள்பட மொத்தம் 2,42,555 நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார். மேலும் திட்டத்தின் செயல்பாடு குறித்து திட்ட அலுவலர் பிரவின் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா உள்ளிட்டோர் விளக்கினர்.

செப். 23-ந் தேதி விவசாயிகளுக்கு ரூ.3,025 கோடி மதிப்பீட்டில், 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2,638 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சிலுவம்பட்டி கிராமத்தில் இலவச மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகள் சந்திரசேகரன், முத்துசாமி ஆகியோரை கலெக்டர் சந்தித்து பேசினார். அப்போது மின்சார வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாபு, உதவி பொறியாளர் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் நம்ம நாமக்கல், பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் ஏ.கே.சமுத்திரம் ஊராட்சியில் 500 எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அடர்வனக் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சி தலைவர் கஜேந்திரன், பிடிஓக்கள் சரவணன், அசோகன், டிஆர்டிஏ செயற்பொறியாளர் குமார் ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சியில் பிஆர்ஓ சீனிவாசன், ஏபிஆர்ஓ கோகுல் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...