/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு
X

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபட உள்ள அலுவலர்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றம் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 447 வார்டுகளுக்கு வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களர்கள் வாக்களிப்பதற்காக 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான கூடுதல் பணியாளர்கள் உட்பட 3,328 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் இரண்டு கட்டமாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேர்வு செய்தார். தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு விரைவில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி 31ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்றுவதை உறுதிசெய்ய 51 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 8 மணி நேரத்திற்கு 17 பறக்கும் படை குழுவினர் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 599 4286 புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!