/* */

போதமலைக்கு 34 கி.மீ. தூரம் ரோடு அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி

ரோடு வசதி இல்லாத போதமலை கிராமத்திற்கு, 34 கி.மீ தூரம் புதிய ரோடு அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

போதமலைக்கு 34 கி.மீ. தூரம் ரோடு அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
X

ராஜேஷ்குமார், எம்.பி.

இது குறித்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை கிராமம். மலை மீது, கீளூர், மேளூர், கெடமலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 4 ஆயிரம் மலைவாழ்மக்கள், பூர்வீகமாக வசித்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் இவர்களின் உறவினர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

சுதந்திரம் அடைந்த காலம் முதல் இப்பகுதி மலைவாழ்மக்கள் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும், போதமலைக்கு மலைப்பாதை அமைக்கப்படவில்லை. போதமலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு ஏதேனும் விபத்து நடைபெற்றாலோ, கர்ப்பிணிகள் பிரசவத்திற்காகவோ, விஷ ஜந்துக்கள் கடியின்போதோ மருத்துவ சிகிச்சைக்கு கீழே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மாணவ மாணவிகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியவில்லை.

போதமலைக்கு மலைப்பாதை அமைப்பதற்கு வனத்துறைக்கு சொந்தமான மரங்களை அகற்ற வேண்டி இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டில் கிரீன் பெஞ்ச் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெற வேண்டி இருந்தது. இந்த நிலையில் கடந்த 1995ம் ஆண்டு மலைவாழ் மக்கள் சார்பில் மலைப்பாதை அமைக்க அனுமதி வேண்டி பசுமை தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. சுமார் 27 ஆண்டுகளாக இந்த விசாரணை நீண்டுகொண்டே இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்தால் போதமலைக்கு புதிய மலைப்பாதை அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆட்சி அமைந்ததும், இது சம்மந்தமாக பசுமை தீர்ப்பாயத்தில் வாதாட தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வில்சனை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். அவரது ஆலோசனைப்படி கடந்த ஒரு ஆண்டாக, பசுமை தீர்ப்பாயம் கேட்ட அனைத்து விபரங்களும், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது விசாரணை முடிந்து, இந்த மலைப்பாதை அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதலின்படி, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள 360 மரங்களை அகற்றி அதற்குப்பதிலாக புதிய மரங்களை நட்டு வளர்ப்பதற்கு, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் வனத்துறைக்கு ரூ.2.13 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அடிவாரத்தில் உள்ள கீளூர், மேளூர் வழியாக போதமலைக்கு 23.651 கி.மீ தூரமும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரை 11 கி.மீ தூரமும் மொத்தம் 34 கி.மீ தூரத்திற்கு, ஊரக வளர்ச்சித்துறை மூலம் மலைப்பாதை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஏற்கனவே சுமார் 35 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ள சாலை அமைக்கும் திட்டம் மறு சீராய்வு செய்யப்பட்டு விரைவில் டெண்டர் கோரப்படும். பல தலைமுறைகளாக ரோடு வசதி இன்றி தவித்த போதமலை கிராம மக்கள், தமிழக அரசின் சீரிய முயற்சியால், தற்போது மலைப்பாதை அமைக்க அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  6. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  8. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  9. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்