/* */

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை
X

விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி.

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய பா.ஜ., அரசு, 2023ம் ஆண்டு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என அறிவித்தது. ஆனால், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படவில்லை. 10 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளின் வளர்ச்சிக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இன்னல்களான வறட்சி, புயல் மழை, பெருவெள்ளம் மற்றும் கொரோனா தொற்று ஆகிய காலங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்து, விவசாயம் முற்றிலும் நலிவடைந்துவிட்டது.

இதுபோன்ற சமயங்களில், மத்திய அரசு வெறும் கண்துடைப்புக்காக வல்லுனர் குழுவை அனுப்பி, பயிர் சேதங்களை ஆய்வு செய்து அறிக்கை பெற்றாலும், நிவாரண உதவியை முழுமையாக வழங்கவில்லை. விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய பயிர் கடள் மற்றும் பண்ணை சாரா கடள் முழுவதும் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றாமல், அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்வதோடு, வரிச் சலுகையும் அளிக்கிறது. மத்திய அரசு, கர்நாடகாவிடம் இருந்து, தமிழகத்துக்கு உரிய காவிரி நதி நீரை பெற்று தரவில்லை. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுபடியான ஆதார விலையையும் அறிவிக்கவில்லை.

மத்திய பா.ஜ., அரசு, தனது 10 ஆண்டு ஆட்சியில், விவசாயிகளை வஞ்சித்துள்ளது. எனவே மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், வரும் காலங்களில், விவசாயிகள் ஒன்று திரண்டு, தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்து, உணவு பஞ்சத்தை உண்டாக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் பாதிப்பதோடு, பொருளாதார நெருக்கடியும் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

Updated On: 14 Jan 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...