/* */

அரசு விடுதிகளில் உணவின் தரத்தை அதிகரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு

அரசு விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

அரசு விடுதிகளில் உணவின் தரத்தை அதிகரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

அரசு விடுதிகளில் தரமான உழவு வழங்கக்கோரி மனு அளிப்பதற்காக, இந்திய மாணவர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இந்திய மாணவர் சங்க, நாமக்கல் மாவட்ட குழு சார்பில், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து, ஹாஸ்டல்களில் தங்கிப் படித்து வருகின்றனர். அரசு ஹாஸ்டல்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், சுவையாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்படுவதில்லை.

அரசு ஹாஸ்டல்களில் தரமற்ற,கெட்டுப்போன உணவு சாப்பிட்ட காரணத்தால், சமீபத்தில் கொல்லிமலை ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியிலும், நடுப்பட்டி நடுநிலை பள்ளியிலும் வயிற்று வலி மற்றும் தலைவலி, மயக்கம் என உடல்நிலை சரியில்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பதும், சிகிச்சை பெறுவதும் தொடர்கதையாக உள்ளது, இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், உடல்நிலையும் கெட்டுப்போகிறது.

எனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தரமான உணவினை வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். அதே போல் ஹாஸ்டல் மாணவர்களுக்கு வழங்க கூடிய உணவு படியை நாள் ஒன்றுக்கு 60 ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன்மணி செல்வன், ஞானிதா, ராஜ சூர்யா மற்றும் விஷ்வா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

Updated On: 27 Jun 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  4. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  5. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  6. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  7. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  8. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  9. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  10. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...