/* */

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி மனு

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி மனு
X

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண்கள்.

நாமக்கல்லில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், கணேசபுரம் புது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் பல ஆண்டுகளாக, தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50,000, ரூ.1 லட்சம்,ரூ. 2 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என பல்வேறு குரூப்புகளில், சுமார் ரூ. 10 கோடிக்கு மேல், ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். ஆரம்பத்தில் சீட்டு எடுப்பவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பிக்கொடுத்து வந்த கலைச்செல்வி, கடந்த சில ஆண்டுகளாக ஏல சீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு, குறிப்பிட்ட காலம் முடிந்தும் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனிடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு, கலைச்செல்வி திடீரென்று தலைமறைவாகிவிட்டார். இதனால் ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கலைச்செல்வி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என 7 பேர் மீது புகார் கொடுத்தனர். போலீசார் அவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கலைச்செல்வி, சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது, அவரது உறவினர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இதனால் தன்னிடம் ஏலசீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்க பணம் இல்லை எனக் கூறினார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

இந்த நிலையில் கலைசெல்வியிடம், சீட்டு பணம் கட்டி ஏமாந்த 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலை, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் இது குறித்து கூறியதாவது:-

இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவில் விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும், மேலும் எங்களை ஏமாற்றி வாங்கிய பணத்தின் மூலமாக, குற்றவாளிகள் வாங்கிய சொத்துக்களை ஜப்தி செய்திருக்க வேண்டும். ஆனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கினை விசாரித்து எந்த சொத்துக்களையும் ஜப்தி செய்யவில்லை. மேலும், சாதாரண மோசடி வழக்காக பதிவு செய்துள்ளனர். மற்றும் முக்கிய நபர்களை வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.

எனவே இந்த வழக்கினை மறுவிசாரணை செய்து கோர்ட் அனுமதியின் பேரில், அனைத்து குற்றவாளிகளையும் வழக்கில் சேர்த்து, அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து, சீட்டு தொகையை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 30 Nov 2022 11:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...