/* */

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 3 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள்  அமைக்கப்படும்: கலெக்டர்
X

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றி அமைத்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்த உள்ள 1,623 வாக்கு சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை பிரித்து 3 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. மேலும், பழுதடைந்த வாக்குசாவடி கட்டிடங்களுக்கு பதில் வேறு இடங்கள் தேர்வு செய்யப்படும். 6 சட்டசபை தொகுதியிலும் 11 வாக்குசாவடிகள் கட்டிட மாற்றம், அமைவிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தொகுதியில் நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு தொகுதியில் ஒக்கிலிப்பட்டி ஊரக சமுதாய சேவை மைய கட்டிடம் ஆகிய 3 வாக்குசாவடிகள் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருப்பதால் பிரித்து புதிதாக வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப்பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...