/* */

உழவர் சந்தையில் அடையாள அட்டை : காய்கறி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Ulavar Card Images-உழவர் சந்தையில் அடையாள அட்டை பெற விரும்பும், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

Ulavar Card Images
X

Ulavar Card Images

Ulavar Card Images-உழவர் சந்தையில் அடையாள அட்டை பெற விரும்பும், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் ஏதுமின்றி நேரடியாக உழவர் சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் 15-20 சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு புத்தம் புதிய தரமான காய்கறிகள் விலை மலிவாகவும், சுகாதாரமாகவும், சரியான எடையில் கிடைப்பதால், அனைவரும் தங்கள் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

மேலும் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய, அடையாள அட்டை பெற விரும்பும், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) அல்லது உழவர் சந்தை நிர்வாக அலுவலரை அணுகி விண்ணப்பித்து, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மூலம் அடையாள அட்டை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2 April 2024 5:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...