/* */

வெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் கடும் பாதிப்பு: ஏற்றுமதி செய்ய கோரிக்கை

வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

வெங்காயம் விலை சரிவால் விவசாயிகள் கடும் பாதிப்பு: ஏற்றுமதி செய்ய கோரிக்கை
X

கூட்டத்தில் பேசும் கலெக்டர் ஸ்ரேயா சிங்

வெங்காயம் விலை கடும் சரிவால், விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டள்ளது. வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ ஆகும். தற்போது வரை 24.9 மி.மீ. மழை பெய்துள்ளது. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட 3.9 மி.மீ. மழை கூடுதலாக பெறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தி;ல் நடப்பு பிப்ரவரி மாதம் வரை நெல் 10,739 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 81,807 எக்டர் பரப்பளவிலும், பயறு வகைகள் 12,085 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 34,906 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 2,518 எக்டர் பரப்பளவிலும் மற்றும் கரும்பு 9,754 எக்டர் பரப்பளவிலும் என மொத்தம் 1,51,809 எக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிர்களில் மரவள்ளி 17,335 எக்டர் பரப்பளவிலும், சின்ன வெங்காயம் 5,272 எக்டர் பரப்பளவிலும், வாழை 2,455 எக்டர் பரப்பளவிலும், மஞ்சள் 1,533 எக்டர் பரப்பளவிலும், தக்காளி 715 எக்டர் பரப்பளவிலும், கத்தரி 625 எக்டர் பரப்பளவிலும், மிளகாய் 330 எக்டர் பரப்பளவிலும், வெண்டை 449 எக்டர் பரப்பளவிலும் மற்றும் கீரை வகைகள் 631 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:

துரைசாமி, (தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்): ராசிபுரம் பகுதியில் சுமார் 2,000 ஏக்கரில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவற்றை அறுவடை செய்து, காய் பறித்து, விற்பனைக்கு வெளியூர் அனுப்புதவற்கு என ஒரு கிலோவுக்கு ரூ.10 செலவாகிறது. ஆனால் வியாபாரிகள், தற்போது வயல்களில் கிலோ ரூ.7க்கு வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனர். கடும் விலை சரிவு காரணமாக, மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்புதுரை (ராஜவாய்க்கால் சங்க நிர்வாகி): மோகனூர் சர்க்கரை ஆலையில், 2.08 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கடந்த, 3 மாதங்களாக, ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கிரையத்தொகை வழங்கவில்லை. மேலும், ஒன்னறை மாதமாக உரம் தட்டுப்பாடாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்: நாமக்கல் ஒன்றியத்தில், ஆவின் கொள்முதல், 31 லட்சம் லிட்டராக உள்ளது. பால் உற்பத்தியை அதிகரிக்க தீவனப்புல் விதை கரணை, விதை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமச்சீர் கலப்பு தீவனம் விலை உயர்வு காரணமாக, கிலோவுக்கு ரூ.10 மானியம் வழங்க வேண்டும். ஆவின் கொள்முதல் விலையைவிட, தனியார் நிறுவனங்கள் கூடுதலாக வழங்குவதால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பசும் பாலுக்கு ரூ.10, எருமை பாலுக்கு ரூ. 12 வீதம் விலை உயர்த்தி வழங்க வேண்டும்.

மெய்ஞானமூர்த்தி, விவசாயி: தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களை, விதைப்பு முதல், அறுவடை வரை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். தற்போது நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை வாகனம் பிடித்து விவசாய வேலைக்கு அழைத்து வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறத்துக்கும் விரிவாக்கம் செய்தால் விவசாயம் மொத்தமாக அழிந்துவிடும்.

பெரியசாமி, பொய்யேரி வாய்க்கால் பாசன சங்க நிர்வாகி: பள்ளிபாளையம் முதல், ஒருவந்தூர் வரை, காவிரி ஆற்றில், 158 நீரேற்று பாசன சங்கங்கள் உள்ளன. ஜூன் 12 முதல், ஜன. 28 வரை, மேட்டூர் சீசன். ஜன. 29 முதல் ஜூன் 11 வரை மேட்டூர் பாசன வாய்க்கால்கள் அடைப்பு காலம். ஆனால், இந்த அடைப்பு காலத்திலும், நீரேற்று பாசன சங்கங்கள செயல்படுகின்றன. இந்த திட்டங்களுக்கான மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாலசுப்ரமணியம், (மின் வாரிய மேற்பார்வை பொறியாளர்): நீரேற்று சங்கங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஸ்ரேயா சிங்: இன்னும் இரண்டு நாட்களில், எத்தனை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எத்தனை நீரேற்று பாசன திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள என்ற விபரங்களை அளிக்க வேண்டும்.

பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 26 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?