/* */

நாமக்கல்லில் இலவச கலைப்பயிற்சிக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை

ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பகுதிநேர கலைப் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இலவச கலைப்பயிற்சிக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை
X

பைல் படம்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கலைகளை கற்றுக்கொள்ளும் வகையில், கட்டணமில்லா பகுதிநேர கலைப் பயிற்சிகள் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம், கிராமிய கலைகள் மற்றும் பாரம்பரிய கலைகள் பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை பயிற்சி அளிக்கப்படும். 5 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சியில் சேரலம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லல.

மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்ட, மாநில , தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகிவைகளில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும். தேசிய பால ஸ்ரீ விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும். ஜூன் 19 முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்டஅலுவலரை 94432 24921, 63829 18902 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

Updated On: 25 Jun 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்