/* */

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. கூட்டம் வராததால், விற்பனை டல்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு  டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு
X

நாமக்கல் நகரில் 2 மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும், பணியாளர்கள் பூஜை செய்து வியாபாரத்தை துவக்கினார்கள். (அடுத்த படம்) மதுப்பிரியர்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் கூட்டம் வராததால், விற்பனை டல்லடித்தது. இதனால் கடை பணியாளர்கள் மற்றும் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவியதால் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, கொரானோ பரவல் குறைவாக இருந்த 22 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு அங்கு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரேனா பரவல் அதிகமாக இருந்ததால் இங்கு தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இதனால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் பலரும் அண்டைமாவட்டமான திருச்சி மாவட்ட எல்லைக்குச் சென்று அங்கிருந்த கடைகளில் மதுபானங்களை வாங்கி குடித்து வந்தனர். சிலர் வாங்கி வந்து ஸ்டாக் வைத்து குடித்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மாவட்ட எல்லையில் போலீசார் திணறினார்கள்.

இந்த நிலையில் நேற்று 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஞாயிற்றிக்கிழமை முதலே டாஸ்மாக் கடைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் தேர்தல் நேரத்தைப் போல் அடிக்கடி டாஸ்மாக் கடைகளுக்கு ரோந்து சென்று பார்வையிட்டு வந்தனர். மதுப்பிரியர்கள் கூட்டமாக வரும்போது எப்படி கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், டோக்கன்கள் வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டனர். குறிப்பிட்ட கடைகளுக்கு கண்காணிப்பாளராக விஏஓ, ஆர்ஐ, தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இன்று காலை 9 மணிக்கு அனைத்து அதிகாரிகளும் அலெர்ட் ஆனார்கள். 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரு சில கடைகளில் மட்டும் 5 முதல் 10 பேர் வரை மட்டுமே மதுப்பிரியர்கள் இருந்தனர். 10 நிமிடத்தில் அவர்களும் பாட்டில்களை வாங்கிச் சென்றுவிட்டனர். அதன்பிறகு போலீசாரும், அதிகாரிகளும் மதுப்பிரியர்கள் வருவார்களாக என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். 12 மணிவரை கூட்டம் வரவில்லை. வழக்கமான நாட்களில் நடைபெறும் விற்பனø கூட நடைபெறாமல் டல்லடித்தது. இதனால் சலிப்படைந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் இடத்தைக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் மதுபானக்கடைகள் இல்லாவிட்டாலும், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்திவந்து அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியர்கள் அதிகவிலைக்கு மதுவை வாங்கிக்குடித்து வெறுத்துப்போய்விட்டனர். மேலும் 2 மாதமாக கொரோன ஊரடங்கால் வேலை வாய்ப்பிழந்துள்ள நிலையில் தொழிலாளர்களிடம் போதிய வருமானம் இல்லாததும் மது விற்பனை டல்லடிக்க காரணம் என்று மதுப்பிரியர்கள் கூறினார்கள்.

Updated On: 5 July 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  6. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  7. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  8. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  9. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து