/* */

குமாரபாளையத்தில் ஒரே சமயத்தில் திரண்ட திமுக., அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையத்தில் ஒரே சமயத்தில் திரண்ட திமுக., அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஒரே சமயத்தில் திரண்ட திமுக., அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு
X

காவிரி வெள்ள பாதிப்புகள் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் செய்ய தி.மு.க. அமைச்சர்கள் நேரு, மதிவேந்தனும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்ததால், இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களை வரவேற்க சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் திரண்டனர்.

குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்புகள் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் செய்ய தி.மு.க. அமைச்சர்கள் நேரு, மதிவேந்தனும், முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமியும் வந்தனர்.

இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களை வரவேற்க சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் திரண்டனர். சாலையின் நடுவே வந்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் படுத்தினர்.

தி.மு.க. நகர செயலர் செல்வம் சாலையை கடந்து சென்று, அ.தி.மு.க.வினரிடம் சாலை ஓரமாக நின்று வரவேற்பு கொடுங்கள். எங்கள் அமைச்சர் கார் அருகில் வந்துவிட்டது. இப்படி போக்குவரத்தினை தடுத்தால், எந்த வாகனமும் வர முடியாத நிலை ஏற்படும் என கேட்டுக்கொண்டார். அதன்பின் அ.தி.மு.க.வினர் சாலையின் ஓரமாக சென்று நின்றனர்.

Updated On: 6 Aug 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  5. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  6. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  7. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  8. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  9. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  10. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...