/* */

குமாரபாளையமா? கொமார பாளையமா? நகர்மன்ற கூட்டத்தில் எழுந்தது கேள்வி

குமாரபாளையம் நகர் மன்ற கூட்டத்தில் குமார பாளையமா? கொமாரபாளையமா? என்ற கேள்வியை மன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பினார்.

HIGHLIGHTS

குமாரபாளையமா? கொமார பாளையமா?   நகர்மன்ற கூட்டத்தில் எழுந்தது கேள்வி
X

குமாரபாளையம் நகர்மன்ற கூட்டம் சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் இன்று நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் குமாரபாளையமா? கொமார பாளையமா? என்ற கேள்வி எழுந்தது.

கூட்டத்தை தொடங்கி வைத்து நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறியதாவது:-

குமாரபாளையம் நகராட்சியை தரம் உயர்த்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குடிநீர் மோட்டார் வைத்து பிடித்தால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் குமாரபாளையம் நகராட்சியில்தான் குப்பை வரி அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய். இதை ஒன்றும் குறைக்க முடியாது என்று சென்னையில் கூறி விட்டார்கள். கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் கேட்காமல் விட்டு விட்டீர்கள். நவீன தொழில் நுட்பத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அதிகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து நகராட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதம் வருமாறு:-

ஜேம்ஸ் (தி.மு.க.) :

வரி வசூல் செய்பவர்கள் தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்துவதில்லை. நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வந்தால், பொதுமக்கள் தாங்கள் தொகை செலுத்தி விட்டோம் என்று ரசீது காட்டுகிறார்கள். குப்பை வரி நான்காயிரம், ஐந்தாயிரம் என கேட்டால், முன்பே ஏன் வசூல் செய்யவில்லை என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

பழனிசாமி (அ.தி.மு.க.)

அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று சொல்வது வேண்டாம். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்கள் பணி செய்வோம். யாரும் கட்சியை விட்டு தர மாட்டார்கள். அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் செய்யும் அட்டகாசத்தை கட்டுப்படுத்தவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளை தூய்மை செய்ய திடகாத்திரமான பணியாட்கள் அனுப்ப வேண்டும். மிகவும் வயதானவர்களாக இருப்பதால் அவர்களால் பணி செய்ய முடியவில்லை. கொமாரபாளையம், குமாரபாளையம் என்ற பெயர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அனைத்து துறையினரும் குமாரபாளையம் என்று போடும் போது, நகராட்சி சார்பில் மட்டும் கொமாரபாளையம் என்று போடுவது ஏன்? இதனை மாற்ற வேண்டும். பம்பாய் மும்பை என்றும், மெட்ராஸ் சென்னை என்றும் மாற்றவில்லையா?

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) :

சேர்மன் வார்டில் ஒருவர் மணல் திருடி விற்று வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள். எனக்கும் குப்பை வரி செலுத்த தகவல் வந்துள்ளது. ஏன் முதலில் வாங்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. இப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது.குடிநீர் விநியோகம் செய்ய தடையில்லா மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி எல்லைப்பகுதியில் வைக்கப்பட்ட போர்டில் தலைவர் பெயர் மட்டும் உள்ளது. குறைந்த பட்சம் ஆணையாளர் பெயராவது இருக்குமாறு செய்யுங்கள். அம்மன் நகர் பகுதியில் சாலை அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சர் நிதி பெற்று தந்தும், அதனை பயன்படுத்தாமல் போனதால் அந்த நிதி திரும்பி போனது. சட்டமன்ற தொகுதி கூட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி என்றுதான் உள்ளது.

காவிரி ஆற்றில் கும்பாபிஷேக விழா, திருவிழா தீர்த்தம் எடுக்க வருபவர்கள் ஒரு பக்கமும், திதி கொடுக்க வருபவர்கள், அஸ்தி கரைக்க வருபவர்கள் ஒரு பக்கமும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருட முடிவு வந்து விட்டது. வரி வசூல் நிலுவை உள்ளதா? அல்லது முழுவதும் வசூல் ஆகி விட்டதா?

வெங்கடேசன் (துணை தலைவர்):

அம்மன் நகர் சாலை போட்டு தர முடியுமா? என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதே பகுதியில் பூங்காவிற்கு நிதி ஒதுக்கியதற்கு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெயர்மாற்றம் செய்ய விண்ணப்பம் கொடுத்தால் வரி வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருக்கும் நகராட்சி பணியாளர்கள், அடுத்த முறை வரி கட்டும் போது மாற்றி கொள்ளலாம் என்று தட்டி கழித்து வருகிறார்கள்.

வேல்முருகன் (சுயேட்சை ):

எங்கள் வார்டில் நான்கு வருடமாக குடிநீர் வருவது இல்லை. ஆனால் குடிநீர் கட்டணம் போட்டு உள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கனகலட்சுமி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தீபா, கோவிந்தராஜ், பாண்டிசெல்வி, பரிமளம், கதிரவன், தர்மராஜன், ஆகியோர் வடிகால், சாலை வசதி, குடிநீர் விநியோகம், காவிரி கரையோர பகுதியில் முள் செடிகள் அகற்றுதல், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, மேலாளர் முருகராஜ், துணை பொறியாளர் கண்ணன், கட்டிட பொறியாளர் ஜான்சிராணி, உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 31 March 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்