/* */

குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, சுயேச்சை கவுன்சிலர் இடையே தகராறு

குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர் இடையே தகராறு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, சுயேச்சை கவுன்சிலர் இடையே தகராறு
X

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர் வேல்முருகன், அ.தி.மு.க. உறுப்பினர் பாலசுப்ரமணி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குமாரபாளையம் நகரமன்ற சாதாரண கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பு நடந்த அவசர கூட்டத்தில் 30வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மற்றும் நகர அ.தி.மு.க. செயலருமான பாலசுப்ரமணி முன் வரிசையில் துணை சேர்மன் வெங்கடேசன் அருகில் அமர்ந்து கொண்டார். எதிர்க்கட்சி தலைவரான எனக்கு முன் வரிசையில் இடம் தரவேண்டும் என கூறியதற்கு, அப்படி ஒரு வழிகாட்டுதல் உள்ளதா? என்று பார்த்துவிட்டு சொல்கிறேன். அதுவரை உங்கள் இருக்கையில் அமருங்கள் என்று கூறியதற்கு, முடியாது என்று கூறினார். இதே பிரச்சனை கூட்டம் தொடங்கியதும் மீண்டும் தொடர்ந்தது.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) :

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சுயேச்சை என தனித்தனியாக இருக்கை ஒதுக்க வேண்டும். நான் கொடுத்த பணிகள் சம்பந்தமான தீர்மானங்கள் எதுவும் இடம் பெறவில்லை. எதிர்க்கட்சி தலைவரிடம் மனுவை தர முடியாது. கமிஷனர் மற்றும் பொறியாளரிடம்தான் மனு கொடுக்க முடியும். அவர்கள்தான் உங்களிடம் சொல்லி தீர்மானம் கொண்டு வந்து, பணிகள் செய்து தர வேண்டும்.

விஜய்கண்ணன் (சேர்மன்):

தலைவர் என்பது எதற்கு? என்னிடம் கொடுக்கப்படும் மனுக்கள் யாவும் பாரபட்சமின்றி பணிகள் செய்திட உத்திரவிட்டுள்ளேன். சுகாதார பணிகளும் அனைத்து வார்டிலும் சீராக நடைபெற வேண்டும் என்றுதான் கூறியுள்ளேன். எஸ்.ஓ.வை கேளுங்கள்.

வெங்கடேசன் (துணை சேர்மன் )

இருக்கை விஷயத்தில் சேர்மன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இதை பெரிதாக எடுத்துக்கொள்வது வேண்டாம்.

கமிஷனர் சசிகலா பணியிட மாறுதலில் செல்வதால், பாலசுப்ரமணி, வெங்கடேசன் ஆகியோர் தீர்மானம் போட்டு இவர் இங்கேயே பணியாற்ற செய்யலாம் என்றனர். எங்கள் வார்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சமாக நடந்து கொண்டதால் கமிஷனர் பணியிட மாறுதலில் செல்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை, என சுயேச்சை கவுன்சிலர் அழகேசன் கூறினார். கவுன்சிலர்கள் நந்தினிதேவி, சியாமளா, அம்பிகா, மகேஸ்வரி, ஜேம்ஸ், சத்தியசீலன்,பழனிச்சாமி உள்ளிட்ட பலர் தங்கள் வார்டு குறைகள் பற்றியும், பணிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றிகளும் கூறினார்கள்.

சில நாட்கள் முன்பு அ.தி.மு.க. நகர செயலராக தேர்வு செய்யப்பட்டதற்கு பாலசுப்ரமணியத்தை பாராட்டி அனைத்து வார்டுகளிலும் பேனர்கள் வைக்கப்பட்டன. அவைகள் இரு நாட்கள் முன்பு நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. அ.தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் முடிந்ததும் மீண்டும் இருக்கை பிரச்சனை குறித்து பாலசுப்ரமணி பேச தொடங்கினார்.

வேல்முருகன் (சுயேச்சை):

இது என்ன நகராட்சி கூட்டமா? மக்கள் பிரச்சனை பற்றி பேச வந்தார்களா? இருக்கை பிரச்சனை பற்றி பேச வந்தார்களா? ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இதையே பேசுவதா?

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):

மக்கள் பிரச்சனை பற்றி பேசி விட்டுத்தான் இருக்கை பற்றி பேசுகிறோம். காது கேட்கவில்லையா?

இவ்வாறு கேட்டதும் வேல்முருகன், பாலசுப்ரமணி இருவருக்கும் கடும் வாக்குவாதம் நீடித்தது. 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததால், அடிதடி ஆகும் நிலையில் உள்ள நிலையில் இருவரையும் விலக்கி விட்டனர். நிறைமாத கர்ப்பிணியான அ.தி.மு.க. கவுன்சிலர் நாகநந்தினியை அழைத்து செல்ல நகர்மன்ற கூடத்திற்குள் அவரது கணவர் வர, இதர பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் சிலர், சேர்மன் ஆதரவாளர்கள் உள்ளே வந்தனர். கூட்டம் முடிந்தது என்று சொல்லி, அனைவரும் செல்லலாம் என தலைவர் மைக்கில் ஒரு கட்டத்தில் சொல்ல அனைவரும் வெளியேறினர்.

கவுன்சிலர் பாலசுப்ரமணி, துணை சேர்மன் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:

நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கட்சி வாரியாக இருக்கை ஒதுக்குவது காலம் காலமாக நடந்து வருவது ஒன்று. இதில் சேர்மனின் ஆட்கள் உள்ளே நுழைந்து கவுன்சிலர்களை மிரட்டுகிறார்கள். இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு கூறினார்கள்.

தலைவர் விஜய்கண்ணன் கூறியதாவது:

இருக்கை விசயமாக கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் கோரிக்கை எழுப்பினர். தமிழக முதல்வர் உள்ளாட்சியில் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் பெண்கள் முன்வரிசையில் அமர மனு கொடுத்தனர். அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சுயேச்சையினர் மனு கொடுத்துள்ளனர். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். அவர்கள் வெளிநடப்பு செய்தனர். துணை தலைவர் வெங்கடேசன் எங்களால் துணை தலைவர் பதவி பெற்றவர். இப்போது அ.தி.மு.கவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Updated On: 29 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்