சோழவந்தான் அருகே பால்காரர் தற்கொலை

குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பால்காரர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சோழவந்தான் அருகே பால்காரர் தற்கொலை
X

கோப்பு படம்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட நடுமுதலைக்குளம் கண்மாய் கரையில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், பிணத்தை நாய் இழுத்து கடித்துக் குதறி கொண்டிருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முருகனுக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எலும்பு கூடாக இருந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில், நடு முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா 45 . இவர், மாடுகளுக்கு கூலிக்கு பால் கரவை தொழில் செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 4:01 PM GMT

Related News