/* */

மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆயத்தக் கூட்டம்

ஏப்ரல் 24ஆம் தேதி அனைத்து பணியாளர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பேரணி சென்னையில் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

மதுரையில்  தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆயத்தக் கூட்டம்
X

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது:

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆயத்த கூட்டம் நடைபெற்றது:

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் அரங்கத்தில் மண்டல அளவிலான ஆயத்த கூட்டத்தை நடத்தினர்.

குறிப்பாக, தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்களது கோரிக்கை, கடன் தள்ளுபடி சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நடைமுறை சிரமங்கள் ஆகியவற்றை கலைந்திடும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் ஏப்ரல் 3ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ளும் வகையில் பேரணி நடத்துவது.

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏப்ரல் 24ஆம் தேதி அனைத்து பணியாளர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் சுமார் ஒரு லட்சம் பேர் கொண்ட மிகப் பெரிய பேரணியை சென்னையில் நடத்தி கூட்டுறவு துறை அமைச்சர் மூலம் முதலமைச்சருக்கு நேரில் கோரிக்கை மனு அளிப்பது குறித்துயில ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் குழு கடன் பயிர் கடன் நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது வரை அந்த தொகை சங்கங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.

எனவே, இந்த கடன் தொகைகளை வட்டியுடன் செலுத்த வேண்டும். செயலாளர்களுக்கான குறைகளை நீக்க வேண்டும் தணிக்கை துறையை பொறுத்தவரை கூட்டுறவு துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது பட்டய தணிக்கைக்கு அனுமதிக்க வேண்டும். சங்கங்களுக்கு தேவையற்ற இயந்திரங்கள் உபகரணங்கள் வழங்குவதற்கு நிர்பந்திக்கப்படுவதைக் கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் மாபெரும் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 29 March 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  2. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  3. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  4. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  6. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  7. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  8. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  9. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  10. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்