/* */

திருமங்கலம் அருகே டோல்கேட்டை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு , நூற்றுக்கணக்கான நடைகள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக கூறி , ரூபாய் 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வாகன ஓட்டிகளுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பியது

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே டோல்கேட்டை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
X

திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது தொடர்பாக, கோட்டாட்சியரிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் , வருகிற டிசம்பர் 8ஆம் தேதி சுங்கச் சாவடி யை முற்றுகையிட போவதாக முடிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி , கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னதாக , இச்சுங்கச்சாவடி விதிமுறையை மீறி இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான உரிய இடமான ராயபாளையம் என்ற இடத்தில் அமைக்கப்படாமல் , கப்பலூரில் அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ,

திருமங்கலம் நகர்வாசிகள் மற்றும் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வேன், டாக்ஸி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் பலமுறை பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டண விலக்கு அளித்தது .

இதனைத்தொடர்ந்து, அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கும் , கட்டண விலக்கு செலுத்த கூறி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், பலமுறை நிர்பந்தப்படுத்தியதால் , சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கும், திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வந்த நிலையில் ,திடீரென்று சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு , நூற்றுக்கணக்கான நடைகள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக கூறி , ரூபாய் 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வாகன ஓட்டிகளுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பியது .இதனால், அதிர்ச்சி அடைந்த திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் , அமைச்சர் மூர்த்தியை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினர். அமைச்சர் மூர்த்தி இதற்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக பேச்சுவார்த்தையில் முடிவு எடுத்தார்.

ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகம் மீண்டும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் செலுத்த நிர்ப்பந்தப்படுத்தி வருகிறது. இதனை ஒட்டி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா - விடம் திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் ,தொழிலதிபர்கள், வியாபாரிகள் இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும் பங்கு பெற்றனர். முடிவில் இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ,திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் ராஜபாளையம், தென்காசி வரை உள்ள வாகன ஓட்டிகள் தங்களுடைய ஆதார் கார்டை சுங்கச்சாவடியிடம் காண்பித்து கட்டணமின்றி இலவசமாக செல்லலாம் என தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் திருமங்கலம் வாகன ஓட்டிகள் மற்றும் ராஜபாளையம் , தென்காசி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் ஏற்கெனவே அறிவித்தபடி, விதிமுறை மீறி வைத்துள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, வருகிற டிசம்பர் எட்டாம் தேதி சுங்கச்சாவடி -யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.

Updated On: 30 Nov 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!