/* */

திருப்பரங்குன்றம் அருகே பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் அருகே பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X

திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் நடைபெற்றது.

இதில், மதுரையின் முதல் பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த் கலந்து கொண்டு ,பச்சைக் கொடி அசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தார்.

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள், உய்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில், பெண் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் , இதில் பங்கேற்ற மாணவர்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் போட்டு பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி திருப்பரங்குன்றம், திருநகர் முக்கிய சாலைகளில் நடைபெற்றது.

Updated On: 7 April 2022 8:02 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!