/* */

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி

சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி
X

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  நடைபெற்ற மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் கலைக்கூடல் நிகழ்ச்சியில் ,தேசபக்தி பாடல் மௌன மொழி நாடகம் மெல்லிசை பாடல் ஒயிலாட்டம் கீபோர்ட் இசை கானா பாடல் பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர்.

மாணவர்கள் ராஜா மற்றும் கமல் தேசபக்தி பாடல் பாடினர். மௌன மொழி நாடகத்தில் ராம்குமார், போதி சத்வவிநாயகம், தனுஷ், பெருமாள், ரத்தினவேல், கதிரவன், ஜீவா, மாணிக்கவாசகர் ஆனந்த் ஆகிய மாணவர்கள் பங்கு பெற்றனர். கேசவன், பீவின்குமர், பிரசன்னா ஆகியோர் ஒயிலாட்டம் ஆடினர். மாணிக்கவாசகர், கமல் மற்றும் ராஜா மெல்லிசை பாடல் பாடினர். பிரசன்னா,நீரஞ்சன்குமார் மற்றும் சுதீப் குமார் ஆகியோர் கீபோர்டு இசை வாசித்தனர். கமல் கானா பாடல் பாடினார். மணிகண்டபிரபு பல குரல் மொழி பேசினார். கார்த்திகேயன் அம்மா பாடல் பாடினார். தனுஷ், பிரவீன்குமார், சூர்யா, மதன்குமார், தங்கராம், சுதாகர் நாகேந்திரன் ஆகியோர் பறையாட்டம் ஆடினர். மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் பெருமாள் நன்றி உரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் ஸ்ரீதேவபாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Updated On: 26 July 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!