/* */

விவசாயிகள் வேதனை: சாலையோரம் கொட்டப்படும் மாங்கனிகள்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்காததால் சாலையோரம் மாங்கனிகளை விவசாயிகள் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விவசாயிகள் வேதனை: சாலையோரம் கொட்டப்படும் மாங்கனிகள்..!
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்காததால் சாலையோரம் மாங்காய்களை விவசாயிகள் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா விளைச்சல், விற்பனை, ஏற்றுமதி என ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றங்களால் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டு மாமரங்களில் அதிகளவில் பூக்கள் கருகியும், பூச்சி தாக்குதல் அதிகரித்ததால், இதனை மருந்து தெளித்து விவசாயிகள் கட்டுப்படுத்தினர். 70 சதவீதம் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கும் மா சீசன், இம்முறை மே மாதம் 15ம் தேதிக்கு பிறகே தொடங்கியது. தற்போது பல்வேறு ரக மாங்காய்கள் அறுவடைக்கு வந்துள்ளதால், அறுவடை செய்யப்பட்ட மாங்காய்கள் விற்பனைக்காக மாங்காய் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் மாங்காய்கள் ஏலம் விடுவதிலும், உரிய விலைக் கிடைக்காமலும் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றனர். கடந்த வாரம் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் மாவிற்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாங்கூழ் நிறுவனங்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியிருந்த நிலையில், கூடுதல் விலை கிடைக்காமல் மா விவசாயிகள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை மண்டிகளுக்கு கொண்டு செல்லாமல் விரக்தியில், சாலையோரம் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

இது குறித்து ஜெகதேவியைச் சேர்ந்த மா விவசாயி முகம்மதுஜான் கூறியதாவது: இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விளைந்த மாங்காய்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஒரு கிலோ அல்போன்சா 35 முதல் 38 ரூபாய், செந்தூரா 8 முதல் 9 ரூபாய், மல்கோவா 45 ரூபாய், பெங்களூரா 9 ரூபாய்க்கும் விலை போகிறது. ஒரு ஏக்கருக்கு இம்முறை 3 முதல் 4 டன் வரை மட்டுமே மாங்காய் விளைந்துள்ளது.

ஆனால் மண்டிகள் செயல்படாததாலும், வெளிமாநில வியாபாரிகள் வராததாலும் மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காமல் விவசயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் மாங்காய்களை அறுவடை செய்யும் பகுதிக்கு அருகில் சாலையோரம் மாங்காய்களை கொட்டி வருகின்றனர் என்று கூறினார்.

இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கிருஷ்ணகிரி #சாலையோரம் #மாங்காய்கள் #கொட்டிசெல்லும் #உரியவிலை #விவசாயிகள் #farmers #dumping #mangoes #roadside #waste

Updated On: 5 Jun 2021 1:19 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்