/* */

கரூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
X

போட்டி மாதிரி தேர்வு நடைபெற்ற மையத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு ஆய்வு செய்தார்.

கரூர் மைய நூலகத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி நான்கு போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வினை துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி நான்கு விஏஓ போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு பொது நூலகத்துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் சேரும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் படி பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்றைய தினம் மாதிரி போட்டி தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட மைய நூலகத்தில் 175 நபர்களும் கிளை நூலகம் குளித்தலையில் 40 நபர்களும் கிளை நூலகம் கிருஷ்ணராயபுரத்தில் 30 நபர்களும் கிளை நூலகம் அரவக்குறிச்சியில் 25 நபர்களும் ஆக மொத்தம் 270 மாணவ மாணவியர்கள் மாதிரி போட்டித் தேர்வுகள் எழுத உள்ளார்கள்.

இந்த போட்டித்தேர்விற்கான மாதிரி தேர்வினை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு துவக்கி வைத்து கூறியதாவது:-

நீங்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது பாட புத்தகங்களில் உள்ள தகவல்கள், விளையாட்டு, அரசியல், பொது அறிவு, நடப்புச் செய்திகள் ஆகியவைகளை குறிப்பு எடுத்து தகவல்களை சேகரித்து படிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாக மாதிரி வினாத்தாள்களை சேகரித்து போட்டி தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். UPSC தேர்வுகளை நேரடியாக எழுதும் போது இந்திய ஆட்சியர் பணியாளராகவும் தேர்வு ஆகலாம்.

போட்டி தேர்வுக்கு தயாராகும் பொழுது விடாமுயற்சி நன்னம்பிக்கையுடன் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து போராடுங்கள். தோல்விதான் வெற்றிக்கு முதல் படி விடாமுயற்சியுடன் படியுங்கள். அனைவரும் வெற்றி பெறலாம். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பின்னர் கரூர் மைய நூலகத்தில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாள தேர்வாணையம் தொகுதி-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 மாணவ மாணவியர்களுக்கு கலெக்டர் நூல்களை வழங்கினார்.

மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை தலைவர் குணசேகரன், முத்துக்குமார். தலைமை ஆசிரியர் செல்வகண்ணன். சல்மான் ஹைதர் பெயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jan 2024 1:25 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  3. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  4. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  5. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்