/* */

கரூரில் திடீரென்று உயர்ந்த சினிமா டிக்கெட் விலை

ஏற்கனவே ரூ 110 க்கு விற்பனையாகி வந்த சினிமா டிக்கெட் பிப்ரவரி 1 ம் தேதி முதல் திடீரென்று ரூ 120 க்கு விற்பனையாகி வருகின்றது.

HIGHLIGHTS

கரூரில் திடீரென்று உயர்ந்த சினிமா டிக்கெட் விலை
X

கரூரில் உள்ள தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை. 

கரூர் மாவட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் இன்று திடீரென்று டிக்கெட் விலை உயர்த்தியுள்ளனர். கரூர் நகரில் அஜந்தா, எல்லோரோ, திண்ணப்பா, அமுதா, பொன் அமுதா உள்ளிட்ட 7 தியேட்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே ரூ 110 க்கு விற்பனையாகி வந்த சினிமா டிக்கெட் பிப்ரவரி 1 ம் தேதி முதல் திடீரென்று ரூ 120 க்கு விற்பனையாகி வருகின்றது.
இந்நிலையில் அனைத்து திரையரங்குகளின் முன்னாள் 01.02.2022 முதல் நுழைவு கட்டணம் ரூ 120 என்றும் Base Rate : 90.44, TMC : 4.00, LBET : 7.24 ஆக மொத்தம் ரூ 101.68 என்றும், Gst இல் CGST 9 % : 9.16, SGST 9 % : 9.16 ஆக மொத்தம் ரூ 120 க்கு விற்பனையாகி வருகின்றது என்று அனைத்து திரையரங்குகளின் வாயிற்படியில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கொரோனாவை காரணம் காட்டி பல மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டு, மேலும், அதிகரித்து வரும் கொரோனா மத்தியில் 50 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 Feb 2022 4:19 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு