/* */

உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 18 கடைகளில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்
X

கரூரில் உணவு விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து கரூர் நகரம் வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு விடுதிகள், டீ கடை, பேக்கரி, பெட்டி கடை என 60 கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் 6 டீ கடைகளில் கலப்பட டீத்தூள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல 12 கடைகளில் செய்தித்தாள்களில் வடை, போண்டா ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, காலாவதியான எடை கருவிகளை வைத்திருந்த குற்றத்திற்காக 4 கடைகள் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தவறுகள் கண்டறியப்பட்டால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 22 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?