/* */

திமுக வாக்காளர்களை நீக்க முயற்சி , செந்தில்பாலாஜி

திமுக வாக்காளர்களை நீக்க முயற்சி , செந்தில்பாலாஜி
X

கரூரில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும் வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தி திமுகவினர் வாக்குகளை நீக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறினார்.

கரூரில் திமுக மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தி திமுக வாக்குகளை நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அவர்களுக்கு வேலை இல்லை. தொடர்ந்து இதே போல ஆட்சியரும் அதிகாரிகளும் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி தான். அப்போது இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் .கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் தவறு செய்ய நினைப்பவர்கள் தவறு செய்ய உத்தரவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Updated On: 23 Jan 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...