/* */

உறவுகளை இழந்த 100 குழந்தைகள்: தத்தெடுத்து கல்வி செலவை ஏற்ற இளைஞர்கள்

குமரியில், உறவுகளை இழந்த 100 சிறுவர் சிறுமிகளை தத்தெடுத்து, அவர்களின் முழு கல்வி செலவையும் ஏற்ற இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.

HIGHLIGHTS

உறவுகளை இழந்த 100 குழந்தைகள்: தத்தெடுத்து கல்வி செலவை ஏற்ற இளைஞர்கள்
X

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம், தக்கலை, திருவட்டார் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை செய்யும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, கடந்த கொரோனா முதல் அலையின் போது, வருமானம் இன்றி பரிதவித்து கொண்டிருந்த பொது மக்களுக்கு உணவு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்த மே மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போதும், பல உதவிகளை செய்த அந்த இளைஞர்கள், தற்போது ஒருபடி மேலே போய், தாய் அல்லது தந்தையை இழந்த சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து முழு கல்வி தொகையையும் வழங்க முன்வந்து உள்ளனர்.

அதன்படி, முதல்கட்டமாக, 100 பேரை தேர்வு செய்து, அவர்களின் கல்விச் செலவை இந்த இளைஞர்கள் மேற்கொள்ள முன்வந்துள்ளனர். முதலாவதாக, தலா ஆயிரம் ரூபாய் வீதம் காசோலையாக வழங்கியதோடு, அவர்களின் இறுதி படிப்பு வரைக்குமான செலவை தாங்களே ஏற்று கொள்வதாகவும் உறுதி அளித்து, ஒப்பந்த பத்திரத்தையும் வழங்கினர். இளைஞர்களின் இச்செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!