/* */

அதிக பாரம் ஏற்றி அதி வேகம்: 38 வாகனங்கள் மீது வழக்கு பதிந்து அபராதம் வசூல்

குமரியில் அதிக பாரம் ஏற்றி அதி வேகம் காட்டிய 38 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 330 ரூபாய் அபராதம் வசூல்.

HIGHLIGHTS

அதிக பாரம் ஏற்றி அதி வேகம்: 38 வாகனங்கள் மீது வழக்கு பதிந்து அபராதம் வசூல்
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 38 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து 330 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஒருநாள் சோதனையில் 38 வாகனங்கள் சிக்கி இருக்கும் நிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் இதுபோன்ற சோதனைகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 27 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!