/* */

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 530 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 530 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 530 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
X

காஞ்சிபுரம் தடுப்பூசி முகாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் விடுமுறை நாட்களான ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டம் முழுவதும் கொரோனா மாபெரும் தடுப்பூசி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மது மற்றும் சிறப்பு அசைவ உணவுடன் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதால் தமிழக அரசு இந்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்தும் ,வீடுதேடி தடுப்பூசி என நாளை 530 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

Updated On: 22 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...