/* */

ஏரியில் கழிவுநீர் கலப்பதாக ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த தேனம்பாக்கம் மக்கள்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஏரி வரத்து கால்வாயில் கலப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஏரியில் கழிவுநீர் கலப்பதாக  ஆட்சியரிடம் புகார்  மனு கொடுத்த தேனம்பாக்கம் மக்கள்
X

தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மாமன்ற உறுப்பினர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளிக்க வந்தபோது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்டது தேனம்பாக்கம் கிராமம். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் புறநகர் பகுதி வளர்ச்சிக்கு பெரிதும் இப்பகுதிஉள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஏரி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாகவே இப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளின் கழிவு நீர், கால்வாயில் விடப்படுவதால் ஏரி மாசடைந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரம் பாதிப்படுவதை தடுக்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாநகராட்சி உறுப்பினர் சங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர். மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரி காஞ்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தேனம்பாக்கம் ஏரியை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 9 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்