/* */

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது
X

: கீழ்கதிர்பூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது 

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி தேசிய பற்றை வெளிப்படுத்த வேண்டும் என மத்திய , மாநில அரசு தெரிவித்தது. ஆகஸ்ட் 13முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தேசிய கொடி ஒவ்வொரு வீடுகளிலும் பறக்க விட உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடும் செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், கீழம்பி, திம்மசமுத்திரம், முசரவாக்கம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும், கடைகள்,வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தேசப் பக்தியை வெளிபடுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டது.ஒவ்வொரு கிராமங்களில் உள்ள வீடுகளில் பறக்க விடப்பட்ட கொடிகளை காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட 40 ஊராட்சியில் 32,802கொடிகள் வழங்கப்பட்டு அதனை அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Updated On: 13 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு