/* */

அதிக பாரம் ஏற்ற சொல்லும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க ஓட்டுநர் நல சங்கம் மனு

கனரக வாகனங்களில் அதிகம் பாரம் ஏற்றுவதால் சாலைகள் சேதமடையும் நிலையில் ஓட்டுநர் உரிமங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை தவிர்க்க மனு அளித்தனர்

HIGHLIGHTS

அதிக பாரம் ஏற்ற சொல்லும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க ஓட்டுநர் நல சங்கம் மனு
X

சாலைகள் சேதம் விபத்து ஏற்படுதல் உள்ளிட்டவைகளால் ஓட்டுநர் உரிமம் பாதிக்கப்படுவதாக கூறி தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் சங்கம்  காஞ்சி மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த போது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகறல், திருமுக்கூடல், வாலாஜாபாத், குன்றத்தூர், மலைப்பட்டு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் எம் சாண்ட் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் கட்டிட தேவைகளுக்கான கட்டுமான பொருட்களின் முக்கிய பங்கு வைக்கும் எம் சாண்ட் பொருட்களை ஏற்றி செல்வதற்கு கனரக லாரிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதில் அரசு அறிவித்த அளவைவிட கூடுதலாக ஏற்றி செல்கின்றது. இதனால் சாலை சேதம் மற்றும் வாகன விபத்துக்கள் நடைபெறுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் சாலையில் பயணிக்க குறைந்த கால அவகாசமே அளிப்பதால் கூடுதலாக அதிக அளவு டன் பொருட்களை ஏற்றி செல்லும் நிலை ஏற்படுவதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து அதன் ஓட்டுநர் உரிமங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இதனை தவிர்க்க கோரி ஓட்டுநர்கள் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நல சங்கத்தின் தொடர் புகார்கள் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் மாநில தலைவர் சுரேஷ் அறிவுரையின் பேரில் மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மூலம் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை முன் வைத்தனர். அதில், அதிக பாரம் ஏற்றி வரும் அனைத்து வாகனங்களினால் நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலைகள் சேதம் அடைந்தும், விபத்துக்கள் மற்றும் உயிர் சேதம் நடந்த வண்ணமாக உள்ளது.

மேலும் விபத்துகளினால் ஓட்டுநர் உரிமங்கள் ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுத்து ஓட்டுநர்களின் உரிமத்தை பாதுகாத்து ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் .

பதினாறு சக்கர வாகனத்தில் அரசு அனுமதித்த அளவான 49 டன் மட்டுமே ஏற்ற வேண்டும் ஆனால் உரிமையாளர்களோ 85 முதல் 90 டன் வரை ஏற்ற வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிக பாரம் ஏற்றி வாகனத்தை செலுத்த கூறும் உரிமையாளர்கள் மீதும் கல் குவாரி கிரஷர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு விபத்துக்களை தவிர்த்து தங்களை பாதுகாக்க வேண்டும் என தங்கள் மனுவில் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 20 Feb 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு