/* */

கொசுவலை போர்த்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 35 வது வார்டை சுகாதாரப்பகுதியாக மாற்றப்படும் என கூறி சிபிஎம் கட்சி வேட்பாளர் கிரிஜா பிரசாரம்

HIGHLIGHTS

கொசுவலை போர்த்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட  கம்யூனிஸ்ட் வேட்பாளர்
X

 35 ஆவது வார்டு நாராயண பாளையம் பகுதியில் போட்டியிடும் திமுக ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிரிஜா கொசுவலை போர்த்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது.

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தொழிற்சங்க பிரதிநிதிகள் , கட்சி நிர்வாகிகள் படை சூழ வலம் வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குபட்ட 35 வார்டு பகுதியில் திமுக கூட்டணி கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கிரிஜா போட்டியிடுகின்றார்.

காஞ்சிபுரம் நகரில் வரும் கொசு தொல்லையால் பல்வேறு நோய்களில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டில் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் காக்கப்படும் நிலவும் தேங்கிநிற்கும் கழிவுநீர் மற்றும் குடிநீர் தொட்டிகள் அருகே முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு கொசு ஒழிப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறி கொசுவலையை போர்த்தியபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் எனவும் முக்கியமாக குடிநீர் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் தனது தொண்டர்களுடன் ஈடுபட்டு வருகிறார்.


Updated On: 13 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்